2019 ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கான இழப்பீடு! அந்நாள் அதிபர் சிறிசேன வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு இலங்கையின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து பல குண்டுவெடிப்புகள் நடத்தபப்ட்டன. குறைந்தது 290 பேரை பலி கொண்ட இந்த தீவிரவாத சம்பவங்களில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்கு காரணம், நாட்டின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் நான்கு மூத்த அரசாங்க அதிகாரிகள் என்று இலங்கையின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தாக்குதல்கள் குறித்து நம்பகமான உளவுத்துறை தகவல்கள் கிடைத்து, எச்சரிக்கை கிடைத்த பிறகும், உரிய நடவடிக்கை எடுக்காமல், அந்நாள் அதிபர் சிறிசேன அலட்சியம் காட்டியதாக உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | கொரோனா பலி எண்ணிக்கையை சொல்லாத சீனாவின் திட்டம் என்ன? WHO கவலை

எனவே, முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது தனிப்பட்ட சொத்தில் இருந்து 273,300 டாலர்களை பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வக்கில் தொடர்புடைய பிற அதிகாரிகள் மொத்தம் $574,000 தொகை இழப்பீடாக செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். இழப்பீட்டுத் தொகை நிதியம் ஒன்றை உருவாக்கி, “இழப்பீடு குறைவாக கொடுப்பது அல்லது செலுத்தாதது” போன்ற பிரச்சனைகளைக் களையவும் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவின் “தவறுகள் மற்றும் தோல்விகளுக்காக” அவருக்கு எதிராக “தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இலங்கை உச்ச நீதிமன்ற அமர்வு, அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சீனாவில் தடை அகற்றம்! சிக்கலில் பாகிஸ்தான்! பேரழிவை ஏற்படுத்தும் அண்டை நாடு

ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கையில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்துள்ளது. மூன்று நகரங்களில் ஈஸ்டர் தொழுகையின்போது தேவாலயங்களுக்குள் அந்த குண்டுகள் பல வெடித்தன. இலங்கையில் உள்ள கிறிஸ்தவர்கள் நாட்டின் மக்கள்த்தொகையில் 10%க்கும் குறைவானவர்கள் என்பதும், அங்கு அவர்கள் சிறுபான்மையினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தியா மற்றும் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் பல எச்சரிக்கைகளுக்கு ஏற்ப செயல்படத் தவறியதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டது.

தாக்குதல்கள் நடந்த சில நாட்களில், குண்டுதாரிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தெளிவான தொடர்பு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை நம்புவதாக இலங்கை புலனாய்வு அமைப்புகள் தெரிவித்தன.

குண்டுவெடிப்புக்கு சதித் திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட 25 பேர் மீதான வழக்கு விசாரணையில் இன்னும் தீர்ப்பு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | Miss Universe 2023: இந்தியா சார்பில் பங்கேற்கும் திவிதா ராய், போட்டியை எப்படி காண்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.