Gayathri Raghuram: களத்தில் சந்திப்போம்! பாஜகவுக்கு சவால் விடும் காயத்திரி ரகுராம்

சென்னை: ’என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மான பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி’ என காயத்ரி ரகுராம் எழுதிய கடிதம் வைரலாகிறது.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் மேலும் சில விஷயங்களை குற்றச்சாட்டாக முன் வைத்திருக்கிறார்.  ‘என்னால் திரும்பக் கொண்டு வர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி, எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி’ என வஞ்சக புகழ்ச்சியாக இந்த கடிதத்தை காயத்திரி ரகுராம் எழுதியிருக்கிறார்.

இறுதியாக அவர் எழுதியிருக்கும் பத்தியில், ‘கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாடு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள்,. நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன்…. விரைவில் களத்தில் சநதிப்போம்’ என அறைகூவல் விடுத்திருக்கிறார்.

பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த காயத்திரி ரகுராம், இந்தக் கடிதத்தை, தனது டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் அவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேஹ் செய்திருக்கிறார். 

அதில், ’அபாசப் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணைப் பற்றி தவறாகப் பேசும் ஒரு தலைவருக்கு Z வகைப் பாதுகாப்பு! ராஜினாமா செய்யும் சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடி ஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன்’ என்று பாஜகவின் மூத்தத் தலைவர்கள் மீது தனது அதிருப்தியையும் தெரிவித்துள்ளார் காயத்திரி ரகுராம்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின் விஷயங்கள் கைமீறி போய்விட்டது என்றும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலையால் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக நேரடி தாக்குதலில் இறங்கியிருந்தார் காயத்ரி ரகுராம்.

திருச்சி சூர்யா கொச்சையாக பேசியதற்கும், அண்ணாமலை பேசியதற்கும் வித்தியாசம் இல்லை என்றும் அதிரடியாக பேசி வந்த காயத்ரி ரகுராம், தற்போது கட்சியின் உயர் தலைமையில் இருக்கும் பிரதமர் மோடியை டேஹ் செய்து நேரடியாக தனது அதிருப்தியை வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

‘Happy Pongal 2023’ என அனைவரும் டிவிட்டரில் பதிவிட்டு வரும் நிலையில், காயத்திரி ரகுராம் மட்டும், டிவிட்டரில் வம்பை பொங்க வைத்திருக்கிறார் என்று தமிழக பாஜகவினர் சங்கடத்தில் நெளிகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.