`ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு அதிமுக ஆதரவு; சட்டத்துறை ஆணையத்துக்கு இபிஎஸ் கடிதம்!

பா.ஜ.க-வின் முக்கிய திட்டமாக கருதப்படுவது `ஒரே நாடு, ஒரே தேர்தல்’. மத்திய பா.ஜ.க அரசின் இந்தத் திட்டத்துக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே கூறியிருந்தது.

இந்திய தேர்தல் ஆணையம்

அதன்படி, மத்திய சட்டத்துறை ஆணையம், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஜனவரி 16-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பியிருந்தது.

அந்த வரிசையில் கடந்த மாதம், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க-வின் `பொதுச்செயலாளர்’ எனக் குறிப்பிட்டு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாகக் கருத்து தெரிவிக்குமாறு சட்டத்துறை ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. மேலும், இந்த கடிதம் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளரா என சர்ச்சையைக் கிளப்பியது.

எடப்பாடி பழனிசாமி

இந்த நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அ.தி.மு.க ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய சட்டத்துறை ஆணையத்துக்கு பதில் கடிதம் அனுப்பியிருக்கிறார். மற்ற அரசியல் கட்சிகளின் பதில் கடிதம் அனுப்ப இன்னும் இரண்டு நாள்கள் இருக்கும் நிலையில், அ.தி.மு.க-வின் இத்தகைய முடிவு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.