கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் வட்டார இந்து சமுதாயம் மற்றும் ஆலய நிர்வாகங்கள் சார்பிலும் 19வது ஆண்டு பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகி ஒருவர் தேசப்பற்றை குறிக்கும் பாடல் ஒன்றை பாடினார். அதை அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த அண்ணாமலை மனம் உருகி கண்ணீர் வடித்தார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், நிகழ்ச்சிக்கு பின்னர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்டியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது; சட்டமன்றத்தில் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்து மக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றி பெற்று சென்ற காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் இந்து மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும்வரை பிரச்சினையை விடபோவதில்லை.
தனக்கு வழங்கபட்ட z பிரிவு பாதுகாப்பு தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தூண்ணறிவு காவல்துறையினரின் அறிக்கை அடிப்படையில் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஏன் எதற்காக வழங்கபட்டது என மத்திய அரசிடம் நான் கேட்கபோவதில்லை. அதேவேளையில் கட்சியில் செய்யவேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படகூடாது என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்ததிற்குரியது.
அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடை தேர்தல் நடத்த திமுக அரசு அவசரபடுகிறது; மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகவிற்கு இல்லை என்று அண்ணாமலை கூறினார்.
அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ள z பிரிவு பாதுகாப்பை குறித்து முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், ஆபாசம் பேச்சாளரின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசும் ஒரு தலைவருக்கு z வகை பாதுகாப்பு. ராஜினாமா செய்ய சரியான முடிவை எடுத்தேன். பெண்கள் பாதுகாப்பு சூப்பர். நன்றி மோடிஜி நான் உங்களை அப்பாவாக பார்த்தேன் என இவ்வாறு காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.