சென்னை: அறுவடைத்திருநாள் மற்றும் உழவர் திருநாளான பொங்கல் திருநாள் தை 1ந்தேதி கொண்டாடப்படும் நிலையில், நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதை ஜோதிடர்கள் தெரிவித்து உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே நாளை தை மாதம் பிறப்பதை முன்னிட்டு, அறுவடைத்திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படு கிறது. பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு மட்டுமின்றி, தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிஷியஸ் என உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் […]
