பழனி: பழனி மலைக்கோயிலில் குடமுழுக்கு விழாவை காண கட்டணமில்லா முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலில் ஜனவரி 27-ம் தேதி காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர். முன்பதிவு செய்துள்ளவர்களில் குழுக்கள் முறையில் 2,000 பேர் தேர்வு செய்யப்பட்டு குடமுழுக்கு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 18 முதல் 20 வரை www.palani murugan.hrce.tn.gov, மற்றும் www.hrce tn.gov.in என்ற இணையதளத்த்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.
