நாகை மாவட்டத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்டம் தென்மருதூர் பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (38). இவர் ஆந்தகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இவர் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், இது குறித்து விசாரணையில் நடத்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளுக்கு தேவதாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தேவதாசை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ஆசிரியர் தேவதாஸ் தலைமறைவானார். இதையடுத்து போலீசார் தலைமறைவான தேவதாசை தீவிரமாக தேடி வருகின்றனர்.