இவர்தான் 2022 Miss Universe… பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

Miss Universe எனப்படும் பிரபஞ்ச அழகிக்கான போட்டிகள் உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, 2022 ஆம் ஆண்டுக்கான 71 ஆவது Miss Universe போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்றிரவு நடைபெற்றது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 100 அழகிகள் இந்த பிரம்மாண்ட போட்டியில் பங்கேற்றனர். ஆடை அலங்காரம், கேட் வாக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டதுடன், பொது அறிவு கேள்வி பிரிவும் இந்த போட்டியில் இடம்பெற்றிருந்தது.

உலகமே ஆவலுடன் உற்று நோக்கிய இந்தப் போட்டியில் அமெரிக்காவின் ஆர் போனி கேப்ரியல் 2022 ஆம் ஆண்டின் Miss Universe ஆக வாகை சூடினார். வெனிசுலா நாட்டை சேர்ந்த டயானா சில்வா இரண்டாவது இடத்தையும், டொமினிகன் குடியரசின் அமி பெனா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் அழகி திவிதா பங்கேற்று உலகின் கவனத்தை கவர்ந்தார்.

Miss Universe ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்’போனி கேப்ரியலுக்கு 5.58 மில்லியன் அமெரி்க்க டாலர்கள் மதிப்பிலான நீலக்கல் பதிக்கப்பட்ட கிரீடம் சூட்டப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழிதான்; இலங்கை அதிபர் உறுதி.!

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா சென், கடந்த 1994 இல் Miss Universe பட்டத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. Miss Universe பட்டத்தை போல, Miss World பட்டத்துக்கும் ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதும், 1994 இல் இவ்ர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.