என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்: கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியக் குடும்பத்தின் உறவினர்கள்…


கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து உயிரிழந்த சம்பவம் மூன்று நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்

சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish Baldevbhai Patel, 39), அவரது மனைவி வைஷாலி (Vaishaliben Jagdishkumar Patel, 37) பிள்ளைகள் விஹாங்கி (Vihangi Jagdishkumar Patel, 13) மற்றும் தார்மிக் (Dharmik Jagdishkumar Patel, 3) ஆகியோர் அடங்கிய குடும்பம், அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக பலியானது.

என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்: கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியக் குடும்பத்தின் உறவினர்கள்... | Anniversary Patel Family Border Crossing Deaths

Amritbhai Vakil/The Canadian Press

பெற்றோரின் கேள்விகள்

இந்நிலையில், ஜகதீஷின் தந்தையான பல்தேவ் பட்டேல் தனது மகனுடன் தான் கடைசியாக என்ன பேசினேன் என்பதுகூட தனக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார். நினைவுகள் மறைகின்றன, ஆனால், வேதனை மறையவில்லை என்கிறார் அவர்.

பல வேலைகளைச் செய்த ஜகதீஷ், அவை எதிலும் சரியான பலன் கிடைக்காததால் அமெரிக்க செல்ல முடிவு செய்தார் என்கிறார் அவருடைய தந்தையான பல்தேவ்.

பிள்ளைகளின் கடைசி தருணத்தில் என்ன நடந்தது என்பது குறித்து எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை என ஜகதீஷின் குடும்பம் வருந்தும் நிலையில், தன் மகன் அமெரிக்கா செல்வான், தங்களுக்கு உதவி செய்வான் என தாங்கள் நம்பியிருந்ததாகவும், ஆனால், இப்போது வேதனை மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறுகிறார் பல்தேவ்.

பிழைப்புக்காக மீண்டும் விவசாயம் பக்கம் ஜகதீஷின் உறவினர்கள் திரும்பியிருப்பதாக தெரிவிக்கிறார் பட்டேலின் குடும்ப நண்பரான Jayesh Chaudhary.
 

என் மகன் எங்களுக்கு உதவி செய்வான் என்று நினைத்தேன், ஆனால்: கனடா எல்லையில் உயிரிழந்த இந்தியக் குடும்பத்தின் உறவினர்கள்... | Anniversary Patel Family Border Crossing Deaths

Family handout/Vaibhav Jha/Indian Express



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.