சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் வென்று அமைச்சராக உள்ள உதயநிதியின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்து ஹேமலதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.