நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டி நாரஹேன்பிட்டி ஷாலிகா மைதானத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்றது.
இந்த போட்டிக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண அலுவலகங்கள் மற்றும் அதிகார சபையின் பல்வேறு திணைக்களங்களின் ஏராளமான விளையாட்டு வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
அங்கு வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்த நகர அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு பிரிவின் விளையாட்டு வீர, வீராங்கனைகள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. நிமேஷ் ஹேரத்துடன் புகைப்படும் எடுத்துக்கொண்டனர்..