டிக்டாக்கில் பாடல் பாடி வீடியோ போட்டு வந்த ஜி.பி. முத்து பூமர் அங்கிள் வரிசையில் பத்தோடு பதினொன்னாக இருந்தவர்தான். அவரது பழைய வீடியோக்களை பார்த்தால் இவரா இந்த அளவுக்கு உயர்ந்தார்? ஏன்? எப்படி என்று அவரை தெரியாதவர்களுக்கு பல கேள்விகள் எழும். பொதுவெளியில் பேசமுடியாத வார்த்தைங்களை ஜி.பி. முத்து பேசினால்கூட தவறு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
மேலும், ஜீரோ ஹேட்டர்ஸ் கொண்ட பிரபலங்களின் வரிசையில் ஜி.பி. முத்துதான் இன்னைக்கு டாப் என்றே சொல்லலாம். ஒரு மனிதன் இடம் பொருள் ஏவலுக்கு தகுந்தாற்போல் மாறுவதுகூட ஒரு வகையில் போலியான வாழ்க்கைதான். ஆனால், ஜி.பி. முத்துவிடம் அது ஒருநாள்கூட தென்பட்டதில்லை. அடுப்பங்கரையில் அமர்ந்து கடிதம் படித்தாலும் சரி, சன்னி லியோனிடம் அவுட்டிங் சென்றாலும் சரி ஜி.பி. முத்துவின் இயல்பு நிலை மாறியதே இல்லை.
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வெற்றி அடைய வேண்டிய தேவையில்லை; எவ்வளவு நாட்கள் இருக்கிறோமோ அவ்வளவு நாட்கள் பேட்டா வந்துவிடும். ஆனால், தான் வெற்றி அடைய வாய்ப்பு இருந்தும்கூட குடும்பத்தை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று அந்த நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியே வந்த ஜி.பி. முத்துவின் வெகுளியான பாசம் ஒவ்வொரு மனிதனுக்கும் உதாரணம்.
இத்தனை மக்கள் ஆதரவு மற்றவர்களுக்கு கிடைத்திருந்தால் அதுவும் ஜி.பி. முத்துவை போல எந்த பின்புலனும் இல்லாமல் வந்தவர்களுக்கு கிடைத்தால், வாய்ப்பை எவ்வழியிலும் பயன்படுத்தவே திட்டமிடுவார்கள்.
அதுபோல ஜி.பி. முத்துவுக்கு தற்போது இருக்கும் ஆதரவுக்கு சட்டசபை தேர்தலில் நின்றால் வெற்றி வாய்ப்புண்டு. அதுவே, அதிமுக அல்லது திமுக சார்பில் போட்டியிட்டால் வெற்றி உறுதி. சமீப நாட்களாக ஜி.பி. முத்து தேர்தலில் போட்டியிட போவதாக வதந்திகள் பரவி வருகின்றது. இந்த நிலையில், அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ஜி.பி. முத்து கூறியது; தன்னை பார்த்தாலே மக்கள் சிரிக்கிறார்கள். தான் அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை.அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் பண்ணும் எண்ணமும் தனக்கு இல்லை. அனைவருக்கும் பொதுவானவன் நான் என ஜி.பி. முத்து தெரிவித்தார்.