அமெரிக்காவின் சொகுசு கப்பலில் பயணித்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், அந்த பெண்ணுக்கு ஹெ.ச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
சொகுசு கப்பலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கடந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜேன் டோ (27) என்ற பெண், ஏலம் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரன்சஸ் குரூஸ் கப்பலில் பயணம் செய்துள்ளார்.
அப்போது பிரன்சஸ் குரூஸ் கப்பலில் ஏல நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களுக்கு மது விநியோகம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜேன் டோவும் வாங்கி அருந்தி இருந்த நிலையில், மது போதையில் தன்னுடைய சுயநினைவை இழந்துள்ளார்.
ஜேன் டோ சுயநினைவை இழந்ததை கவனித்த ஏல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர், ஜேன் டோ கப்பலில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்ற பிறகு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கிடையில் ஜேன் டோ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போது, அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் ஆணுறை கிழிந்ததாக நியூ யார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஹெ.ச்.ஐ.வி பாதிப்பு
கப்பல் பயணம் முடிந்த சில தினங்களுக்கு பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ஜேன் டோ உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவ பரிசோதனை செய்து பார்த்த போது, ஜேன் டோ ஹெ.ச்.ஐ.வி பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அதன் பிறகே தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை ஜேன் டோ அறிந்துள்ளார், இதனால் அதிர்ச்சியில் பல மாதங்களாக ஒருவிதமான மன அழுத்தப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதமே தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது ஜேன் டோ புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.