போபால்,
மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று மனாவர் பகுதியில் இருந்து தர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனியார் ஹெலிகாப்டரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிவராஜ் சிங் சவுகான் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், சிவராஜ் சிங் சவுகான் சாலை மார்க்கமாக புறப்பட்டுச் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
Related Tags :