மாணவர்களுக்கு குட் நியூஸ்..!! பள்ளிகளுக்கு ஜனவரி 18-ம் தேதி விடுமுறை அறிவிப்பு..!!

அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, பொங்கல் பானைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, மஞ்சள் கொம்பு செடியை கட்டி, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று (ஜன. 16) மாட்டுப் பொங்கல் ,17-ம் தேதி காணும் பொங்கல். இதையொட்டி வரும் 17-ம் தேதி வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் 18ம் தேதி பள்ளி கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. அரசு தரப்பில் வரும் 17-ம் தேதி வரை பள்ளி கல்லுாரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழர் திருநாளை கருத்தில் வைத்து அனைத்து கல்வி நிறுவனங்களும் பாரபட்சமின்றி ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் என அனைவருக்கும் நான்கு நாட்கள் விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு விடுமுறை அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பும் விதமாக ஜனவரி 18-ம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.