பாராளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை ‘பி.ஆர்.எஸ் இந்தியா’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து சேகரித்து வருகிறது.
இந்த அமைப்பின் தரவுகளின்படி, அடுத்ததாக, தமிழகத்தைச் சேர்ந்த 18 மாநிலங்களவை உறுப்பினர்களில், 136 புள்ளிகளுடன் திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என்.சோமு (திமுக) முதல் இடத்தில் இருக்கிறார்.
131 புள்ளிகளுடன் திமுகவின் வில்சன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர்கள் இருவருமே மாநிலங்களவை சுயமுயற்சி விவாதங்கள், தனிநபர் மசோதாக்கள், அதிக கேள்விகள் கேட்பதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் அதிக கேள்விகளை எழுப்பியவர்கள்: கனிமொழி என்விஎன் சோமு 125 கேள்வி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் 115 கேள்விகளை எழுப்பி இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அதிமுகவைச் சேர்ந்த தம்பிதுரை 36 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று முதலிடமும், ஜி.கே.வாசன் 27 சுயமுயற்சி விவாதங்களில் பங்கேற்று இரண்டாம் இடமும் பிடித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த வில்சன் 3 தனிநபர் மாசோதாக்களை அறிமுகம் செய்து முதலிடம் பெற்றுள்ளார். ஒரு தனிநபர் மசோதாவைக் கொண்டு வந்த திருச்சி சிவா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.