டெல்லியில் தேர்தல் ஆணையம் தலைமையில் இன்று ரிமோட் வாக்குப்பதிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக இன்று அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.
இந்த கூட்டம் காலை 11 மணியளவில் டெல்லியில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அங்கிகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளுக்கும், 57 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப குழுவினர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் இயந்திரங்களின் செயல் விளக்கத்தை அளிக்க உள்ளனர். இது தொடர்பான தங்கள் கருத்துக்களை, இம்மாத இறுதிக்குள் எழுத்துபூர்வமாக அளிக்க கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தம்பிதுரை, சந்திரசேகர் பங்கேற்கின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சுப்புரத்தினம், பிரகாஷ் பங்கேற்கின்றனர்.
newstm.in