கடலூர்: வடலூரில் வாரந்தோறும் சனிக் கிழமைகளில் ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் வடலூர், சேத்தியா தோப்பு, குறிஞ்சிப் பாடி, மந்தாரக் குப்பம், புவனகிரி உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்வது வழக்கம்.
கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உட்பட சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று அதிகாலை 2 மணிக்கு சந்தையில் ஆடுகள் விற்பனை தொடங்கியது.
ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆடு விற்பனை சற்று மந்த மாகத்தான் காணப்பட்டது. நேற்று சுமார் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.