9 வயது சிறுமியை சீரழித்த இரண்டு சிறுவர்கள்!!

பக்கத்து வீட்டு சிறுவர்கள் இரண்டு பேர் 9 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் 9 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதனை அறிந்த பக்கத்து வீட்டு சிறுவர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றுள்ளார். ஆனால், சிறுமியை இரண்டு சிறுவர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அந்த கொடூரத்தை வீடியோ பதிவு செய்தனர்.

நடந்ததை வெளியே கூறினால் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பரப்பிவிடுவோம் என சிறுமியை மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்ததை குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில்,வழக்கு பதிவு செய்த போலீஸார் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

புகாருக்கு உள்ளான இரண்டு சிறுவர்களும் வீட்டைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளனர். அவர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.