மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தற்பொழுது வரை மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காவல்துறையினர் என 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சிறந்த மாடுபிடி வீரராக மூன்றாம் இடம் பிடித்து வந்த அரவிந்த்ராஜ் என்பவர் மாடு முட்டியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன் தொடர்ச்சியாக சிறந்த முறையில் மாடு பிடித்த வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டதால் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். சற்று முன்னர் 11 காளைகளை அடக்கி மூன்றாவது இடம் பிடித்திருந்த தமிழரசன் என்பவர் காயம் காரணமாக வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 19 காளைகளை அடக்கிய மணி என்பவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாட முடியாத சூழலில் தற்பொழுது வெளியேறினார். அவர் சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.