சென்னை அமைச்சர் பொன்முடி சகோதரர் டாக்டர் தியாகராஜன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் விழுப்புரத்தில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி தம்பியான மருத்துவர் தியாகராஜன் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் […]