மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது 67வது படத்துக்காக மீண்டும் நடிக்கிறார். கமல்ஹாசன் தயாரித்து நடித்திருந்த விக்ரம் படத்தில் கார்த்தியின் கைதியின் பங்கு இருந்ததால் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் என்ற பெயரில் லோகேஷின் அடுத்தடுத்த படங்கள் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது சென்னையில் விஜய்யின் 67வது படத்துக்கான ஷூட்டிங் வேலைகள் படு மும்முரமாக டெஸ்ட் ஷூட் என எல்லாம் தொடங்கி நடந்துக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்தை போன்று 50/50 ஆக இல்லாமல் முழுக்க முழுக்க தன்னுடைய மொத்த பங்கும் இந்த படத்தில் இருக்கு என லோகேஷ் கூறியது ரசிகர்களுக்கு கூடுதல் குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் 67ல் கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ள நிலையில் கே.ஜி.எஃபில் ஆதிராவாக வந்து மிரட்டிய சஞ்சய் தத்தும் இதில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதேபோல கன்னட சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான ரக்ஷித் ஷெட்டியும் விஜய்யின் 67-ல் நடிக்கப் போவதாக தகவல் கசிந்திருக்கிறது. இப்படியாக பல முன்னணி மற்றும் முக்கிய திரை நட்சத்திரங்கள் விஜய் 67ல் நடிக்கவிருப்பதால் படத்தின் மீதான ஆவல் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் அதிகமாகியிருக்கிறது.
மேலும் த்ரிஷாவும் விஜய் 67ல் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வந்தாலும் இதுகுறித்தும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதே சமயத்தில் பிக்பாஸ் பங்கேற்பாளர் ஜனனி விஜய் 67ல் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
விஜய்யின் வாரிசு படம் ரிலீசாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கும் வேலையில் விஜய் 67 குறித்து வெளியாகும் தகவல்கள் விஜய் ரசிகர்களின் ஆர்வத்துக்கு ஆறுதலாகவும் இருப்பதாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.