கன்னியாகுமரி மாவட்டத்தை அடுத்த வில்லுகுறி அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு தூத்துக்குடி சேர்ந்த கூலி தொழிலாளி, அவரது மனைவி, 11 வயது மகள் மற்றும் மகனுடன் சுப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர்.
அப்பொழுது அவரது 11 வயது மகள் கடைக்குச் செல்ல தனது தம்பியுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது போதையில் எதிரே வந்த அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் வேலை பார்க்கும் இளைஞர் ஜெகதீஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டதோடு தப்பி செல்ல முயன்ற இளைஞரை பிடித்து இரணியில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொத்தனார் ஜெகதீஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நாகர்கோயில் மகிளான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.