சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயத்துறைக்காக வழங்கிய டீசலை விநியோகிக்கும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது.
சீன அரசாங்கம் நாட்டின் விவசாயத்துறைக்காக 68 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளது இதனை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அறுவடை ஆரம்பமாகி உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதலில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்குகிறது.. கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரை ஏக்கரிலிருந்து இரட்டரை ஏக்கர் வரை நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டெயருக்கு 15 லீற்றர் வீதம் டீசல் இலவசமாக வழங்கப்படும். அறுவடை மேற்கொள்ளும் விதத்திற்கு அமைய அனைத்து மாவட்டங்களுக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்கும். கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள முடியும்.