புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் மீண்டும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மம்தா மோகன்தாஸ் 2005இல் மயோக்கம் என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சிவப்பதிகாரம், தடையற தாக்க, குசேலன், குரு என் ஆளு,ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பின்னணி பாடகியும் கூட.
ஏற்கனவே மம்தா மோகன் தாஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மம்தாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு குணப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தனக்கு வேறொரு நோய் வந்திருப்பதாக மம்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மம்தா மோகன்தாசுக்கு விட்டிலிகோ என்ற ‘ஆட்டோ இம்யூன்’ நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தனது இயற்கையான நிறம் மாறுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விட்டிலிகோ என்பது சருமத்தின் நிறத்தை (ஏஏடி) இழக்கச் செய்யும் ஒரு நோய்.
விட்டிலிகோ உடலின் பல்வேறு இடங்களில் தோல் நிற இழப்பை ஏற்படுத்துகிறது. இரு கைகள் அல்லது இரண்டு முழங்கால்கள் போன்ற இரு பக்கங்களையும் பாதிக்கிறது. சிலருக்கு உதடுகளில், உச்சந்தலையில் அல்லது முடி, புருவங்களில் நிறமாற்றம் ஏற்படும்.
விட்டிலிகோவுக்கு எந்த சிகிச்சையும் இல்லை. இருப்பினும், வெள்ளை தோல் திட்டுகளின் தோற்றத்தை குறைக்க உதவும் கூடுதல் சிகிச்சை உள்ளன.
newstm.in