சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் இந்தவருடம் ஜனவரி முதல் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவை மேலும் 5 மாங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:இதற்கமைவாக இந்த நிவாரண கொடுப்பனவு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்பட உள்ளதாக கூறினார்..
இதுதொடர்பாக நேற்று (17) அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
13. குறைந்த வருமானங் கொண்ட குடும்பங்களுக்கான சலுகை ஏற்பாடுகள்
புதிய நலன்புரி நன்மைகளை செலுத்தும் முன்மொழிவு முறைமையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்காக புதிய தகைமைகாண் மற்றும் அளவுகோல்களைப் பயன்படுத்தி பயனாளிகளை அடையாளங் காண்பதற்கான கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார சூழலில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்கள் முகங்கொடுக்கின்ற நேரிடுகின்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, 2023 ஆம் ஆண்டில் முதல் நான்கு (04) மாதங்களுக்கு நிதிச் சலுகை வழங்குவதற்கும் 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்பொது ஆரம்பிக்கப்பட்டுள்ள கணக்கெடுப்புக்களைப் பூர்;த்தி செய்து, முன்மொழியப்பட்டுள்ள புதிய நலன்புரி நன்மைகளை செலுத்தும் முன்மொழியப்பட்டுள்ள முறைமையை அறிமுகப்படுத்தும் வரை, சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் இடர்களுக்கு ஆளாகக்கூடிய குடும்பங்களுக்கு 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள நிதிச்சலுகைகளை 2023 ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரைக்கும் மேலும் ஐந்து (05) மாதகாலத்திற்கு நீடிப்பதற்கு தேவையான நிதியொதுக்கீட்டை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.