சாகர்டிகி: பாஜ தலைமையிலான ஒன்றிய அரசானது மேற்கு வங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சாகர்டிகியில் நிர்வாக ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி,‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கான நிதியை ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. மாநிலத்திற்கு ரூ.6000 கோடியை ஒன்றிய அரசு வழங்க வேண்டி உள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களில் 100 நாள் வேலை உறுதி திட்டத்துக்கான நிதி கிடைக்கும்போது மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுகின்றது” என்றார்.