திருமகன் ஈவேரா மறைவு காங்கிரஸ் கட்சிக்கு பேரிடியாக அமைந்தது மட்டுமின்றி, திமுக ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒரு அக்னி பரீட்சைக்கும் வித்திட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று நடக்கும் முதல் தேர்தல் என்பதால் கவனமாக காய்களை நகர்த்த வேண்டியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி பூசலை சரியாக பயன்படுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவிற்கு எதிரான மோதல் போக்கை மிகத் தீவிரமாக கடைபிடித்து வருகிறார்.
தடம் பதித்த தாமரைஅதுமட்டுமின்றி மாநில உரிமைகள், தமிழ் உணர்வு, தமிழர்களின் எண்ணம், திராவிட அரசியல் ஆகியவற்றுக்கு எதிராக மத்திய அரசும் நடந்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையில் 4 பாஜக எம்.எல்.ஏக்களை அமர வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக 2024 மக்களவை தேர்தலை நோக்கி வியூகம் வகுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் வரும் இடைத்தேர்தல் திமுகவிற்கு மட்டுமின்றி, பாஜகவிற்கும் அரசியல் ஆழம் பார்க்க வாய்ப்பாக அமைந்துள்ளது.
திமுக கூட்டணி போட்டிஅடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளதால், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் யாருக்கு சீட்? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? இல்லை திமுகவே எடுத்துக் கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை காங்கிரஸ் தோற்றால் அது அடுத்து வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக திரும்பிவிடும்.
பாஜகவிற்கு சீட்அதிமுக கூட்டணியில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படுமா? இல்லை உண்மையான அதிமுக நாங்கள் தான் என்பதை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவாரா? எனக் கேள்விகள் எழுகின்றன. பாஜகவிற்கு சீட் ஒதுக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. எனவே பாஜக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாம். இது அக்கட்சிக்கு பெரும் சிக்கலாகவும் மாறக்கூடும்.
கொங்கு மண்டல செல்வாக்குஆனால் ஈரோடு மொடக்குறிச்சி, கோவை தெற்கு என கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே தடம் பதித்துள்ளது. இதை வைத்து ஈரோடு கிழக்கில் தங்கள் செல்வாக்கு எப்படி என்பதை நோட்டம் பார்க்க தாமரை டீம் ஒன்று களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக நேரடியாக களமிறங்கினால் மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, மக்களவை தேர்தல் முன்னோட்டம் எனப் பல்வேறு விஷயங்களுக்கு விடை காண முடியும்.
வம்பிழுக்கும் காயத்ரிஇதற்கிடையில் அண்ணாமலை களமிறங்க வேண்டும். அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என காயத்ரி ரகுராம் ட்வீட் போட்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் பாஜக போட்டியிடுமா? அதில் யாருக்கு சீட்? என்பதெல்லாம் டெல்லி எடுக்கும் முடிவுகள் என்பதை மறுப்பதற்கில்லை. குறைந்தபட்சம் வாக்கு வங்கியை உயர்த்தி காட்டினாலே தமிழ்நாட்டு அரசியலில் பாஜகவிற்கு சாதகமான ஒன்றாக மாறிவிடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
திமுக vs பாஜகஇந்த வாக்கு வங்கியை வைத்தே அதிமுகவிடம் அதிக சீட்களை பேரம் பேச வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை இல்லை. அதற்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலே உதாரணம் என சுட்டிக் காட்டி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதகளம் செய்துவிடும். எனவே ஆளுங்கட்சியும் சரி, எதிர்க்கட்சிகளும் சரி. இடைத்தேர்தல் விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டியிருக்கிறது.