புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக கொண்டப்படுகிறது. 63-ம் ஆண்டு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 270 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். வன்னியன் விடுதியில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார். ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேடையுடன் கூடிய நிரந்தர வாடிவாசல் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.