மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள்..!

மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்ற புகழ்வாய்ந்த, தலைவர்களில் ஒருவரான எம்ஜிஆர்ருக்கு இன்று பிறந்தநாள்…. வலிமையான அரசியல் தளத்திற்கு இட்டுச் சென்ற அவரது திரைப்படங்களை அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு…

சினிமாவை பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் உத்தியை சரியாக உள்வாங்கிக் கொண்டு தமது திரைப்படங்களில் புகுத்தியவர் எம்ஜிஆர். பகுத்தறிவையும் சமத்துவத்தையும் பறைசாற்றும் கதைகளையே அவர் தேர்வு செய்து நடித்தார்.

தெய்வத்தின் இடத்தில் தாயை மாற்றாக வைத்து இயற்றப்பட்ட பாடல்களும், வசனங்களும் எம்ஜிஆருக்கு தாய்க்குலத்தின் ஆதரவைப் பெற்றுத்தந்தது.

ஏசு, புத்தர், காந்தி கொள்கையை பின்பற்றி அகிம்சையைப் போற்றும் காட்சிகளையும் பாடல்களையும் எம்ஜிஆர் தமது படங்களில் தவறாமல் இடம் பெறச் செய்தார்.

தமது அரசியல் வழிகாட்டியான அண்ணாவை திரையுலகிலும், அரசியலிலும் அவர் ஒருபோதும் மறந்ததில்லை. கடைசி மூச்சு வரை அண்ணா நாமம் வாழ்க என உச்சரித்து வந்தார் எம்ஜிஆர்.

 

தொழிலாளி, விவசாயி, படகோட்டி, ரிக்சாக்காரன், காவல்காரன், மாட்டுக்காரன் என பல்வேறு உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக தன்னை படத்தில் வரித்துக் கொண்டதால், ஏழை நடுத்தர மக்களின் பேரன்பையும் ஆதரவையும் பெற்றவர் எம்.ஜி.ஆர்.

கொள்கைகளின் வழியே அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்த எம்.ஜி.ஆர் தமிழகத்தில் 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தார். அவர் தொடங்கிய கட்சியை வழிநடத்திய ஜெயலலிதாவும் பல ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்.

எம்ஜிஆரின் புகழ் ஏழை எளிய மக்களின் வாழ்வுடன் கலந்தது. அதனால்தான் அவர் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியவில்லை. தலைமுறைகள் கடந்த பின்னரும் இன்றும் எம்ஜிஆர் மகத்தான மக்கள் திலகமாக விளங்குகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.