மான் வேட்டையாடிய மலையப்பசாமி – திருப்பதி மலையில் நடைபெற்ற வேடுபரி உற்சவம்

காணும் பொங்கலை முன்னிட்டு திருப்பதி மலையில் வேடுபரி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
காணும் பொங்கல் அன்று திருப்பதி மலையில் பாரிவேட்டை என்ற பெயரில் வேடுபரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், காணும் பொங்கல் நாளான நேற்று வேடுபரி உற்சவம் திருப்பதி மலையில் நடைபெற்றது.
வேடுபரி உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச ஆயுதங்களை தரித்து உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டார். அவருடன் கிருஷ்ணர் மற்றொரு திருவாச்சியில் எழுந்தருளி புறப்பட்டார். ஏழுமலையான் கோவிலில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தை உற்சவர்கள் ஊர்வலம் அடைந்தது.
image
இதையடுத்து அங்கு உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து மலையப்ப சுவாமி அங்குள்ள வனப்பகுதியில் மூன்று முறை முன்னும் பின்னுமாக எடுத்து செல்லப்பட்ட நிலையில், கோவில் அர்ச்சகர் வனப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பொய் மான், புலி ஆகிய பொம்மைகள் மீது வெள்ளி வேல் ஒன்றை வீசி எறிந்தார்.
image
இதைத் தொடர்ந்து உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின் உற்சவர்கள் அங்கிருந்து புறப்பட்டு ஊர்வலமாக ஏழுமலையான் கோவிலை அடைந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனத்தை பெற்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.