கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்ற 3 பேரை பொதுமக்கள் கதவுக்கு பூட்டு போட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் சிவக்குமார் நகரில் ஆளில்லாத வீட்டிற்குள் 3 பேர் சென்றுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அந்த வீட்டின் வெளிக்கதவிற்கு பூட்டு போட்ட பின்னர் மத்திகிரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வீட்டில் உள்ளே இருந்த 3பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் 3பேரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.