9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் உயிரிழப்பு..!!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 860 காளைகள் பங்கேற்றன. இதில் 23 காளைகளை பிடித்த சின்னபட்டி தமிழரசன் முதல் பரிசை வென்றார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை பிடித்த பாலமேடு மணி என்பவர் இரண்டாவது பரிசை வென்றார்.

15 காளைகளை பிடித்த பாலமேடு ராஜா மூன்றாவது இடம் பிடித்தார்.நெல்லை பொன்னர் சுவாமி கோவில் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு உரிமையாளருக்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காவல் ஆய்வாளர் உட்பட 35 பேர் காயமடைந்தனர். 10 பேர் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பாலமேடு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரவிந்த ராஜன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலமேடு பகுதியை சேர்ந்த அரவிந்த் ராஜன் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.