Budget 2023: நடுத்தர வர்க்கத்தினரின் டாப் எதிர்பார்ப்புகள் இவை, நிறைவேற்றுமா அரசு?

மத்திய பட்ஜெட் 2023: இந்தியாவின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இணை அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் இணைந்து பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் அனைத்து பிரிவினருக்கும் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. இம்முறை மோடி அரசின் பட்ஜெட் தொகுப்பில், ஒவ்வொரு வகுப்பினரும் எப்படி, எந்த வகையில் பலன் அடைவார்கள் என்பது, பட்ஜெட் தாக்கல் செய்த பிறகே தெரியவரும். எனினும், இந்த முறை அனைவரும் தங்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 

மிக முக்கியமாக இந்த பட்ஜெட்டில் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினருக்கு என்ன எதிர்பார்ப்புகள் உள்ளன? எந்த வகையான சலுகைகள் வழங்கப்படும் என அவர்கள் காத்திருக்கிறார்கள்? இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் 5 முக்கிய பட்ஜெட் எதிர்பார்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

வரி விதிப்பில் விலக்கு அளிக்க கோரிக்கை

இந்தியாவில் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், இந்த முறை பட்ஜெட்டில் வரி அடுக்குகளில் மேலும் சில தளர்வுகளை எதிர்பார்க்கிறார்கள். மேலும் புதிதாக தங்கள் மீது எந்த வரியின் சுமையும் இருக்கக்கூடாது என்றும் விரும்புகிறார்கள். கோவிட் காலம் முதல் பணவீக்கம் மற்றும் வேலையிழப்பு போன்றவற்றால் அவதிப்படும் தொழிலாளி வர்க்கம் இந்த முறை மோடி அரசால் வரி விதிப்புகளில் விலக்கு அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளது. புதிய வரிகள் அமல்படுத்தப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தாலும், வரி அடுக்குகள் குறித்து இன்னும் சந்தேகம் உள்ளது. இது குறித்த தெளிவான உறுதி எதுவும் அளிக்கப்படவில்லை. 

வேலைவாய்ப்பு உருவாக்கம்

புதிய பட்ஜெட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை நீக்குவதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் நடுத்தர வர்க்கத்தினர் பிப்ரவரி 1ஆம் தேதிக்காக காத்திருக்கின்றனர். மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து எடுக்கப்படும் முயற்சிகள் குறித்து நடுத்தர மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். கொரோனா காலத்தில் ஏராளமானோர் தங்கள் தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர், பலரது தொழில்கள் முடங்கியே விட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். பல நடுத்தரக் குடும்பங்கள் இப்போது வாழ்க்கை நடத்த முடியாமல் தவிக்கின்றன. நடுத்தர வர்க்கத்தினருக்கு வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக, உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புத் தொழில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்காக அரசாங்கம் புதிதாக திட்டங்களை உருவாக்கும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 

காப்பீடு

கொரோனா தொற்றுக்குப் பிறகு, உலக அளவில் மருத்துவக் காப்பீட்டுத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மருத்துவக் காப்பீட்டிற்கான விதிகளில் சில தளர்வுகளை அரசிடம் இருந்து நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்க்கின்றனர். 80டி பிரிவின் கீழ் மருத்துவக் காப்பீட்டுக்கான விலக்கு தொகையை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என நடுத்தர வர்க்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி விலக்கு

நடுத்தர வர்க்கத்தினர் மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டை ஜிஎஸ்டியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பட்ஜெட்-2023ல், உடல்நலக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு மீது ஜிஎஸ்டி விதிக்கப்படாத படி ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக உள்ளது. கூடுதலாக, உடல்நலக் காப்பீட்டு பிரிவில் வருமான வரியின் 80D பிரிவின் கீழ் சுகாதார காப்பீட்டு பிரீமியத்திற்கு அதிக விலக்கு வரம்பு இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

நடுத்தர வர்க்கத்தினரின் வரிச்சுமையைக் குறைக்கும் வகையில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் கல்விக் கட்டணத்தை (ட்யூஷன் ஃபீஸ்) விலக்குவதில் இருந்து தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. கல்விக் கட்டணம் வேறு ஏதேனும் விதிவிலக்குகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று இந்த வர்க்கத்தினர் கூறி வருகிறார்கள். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C விதியில் முதலீடு/செலவு உட்பட பல விஷயங்களுடன் ஏற்கனவே உள்ளன. மேலும் இதன் வரம்பு ரூ. 1.5 லட்சம் ஆகும்.

வரியில்லா வரம்பு 3 லட்சமாகலாம் 

எங்கள் கூட்டாளர் வலைத்தளமான ஜீ பிசினசிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இந்த முறை வரி செலுத்துவோர் பட்ஜெட்டில் பல பெரிய பரிசுகளைப் பெறக்கூடும். எனினும், இதில் மிகப்பெரிய நிவாரணம் என்னவென்றால், இந்த முறை அரசாங்கம் வரி விலக்குக்கான வரம்பை அதிகரிக்கக்கூடும். 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக அரசு இதை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.