முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா-வின் திடீர் மறைவு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குடும்பத்தை அதிர்ச்சியில் புரட்டி போட தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய திருப்பங்களுக்கு வித்திட்டுள்ளது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் வரப் போகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்இதில் யாரை நிறுத்துவது, எந்த கட்சிக்கு ஒதுக்குவது, வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும், 2024 மக்களவை தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளதா என பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. வழக்கமாக இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும். இந்த வழக்கத்தை மாற்றி திருப்புமுனை அரசியலுக்கு வித்திட்டால் என்னவென்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டு வருகிறார்.
2021 சட்டப்பேரவை தேர்தல்இதையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் கமிட்டிகள் அமைத்தல், சமூக வாக்குகளை வசப்படுத்துதல் என சைலண்டாக சில விஷயங்களை அதிமுக தொடங்கியுள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து யுவராஜா போட்டியிட்டார்.
திமுக ஆட்சிஆனால் காங்கிரஸின் திருமகன் ஈவேரா-விடம் 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இரண்டாம் இடம் பிடித்தார். இதில் கிடைத்த பெருவாரியான வாக்குகள் அதிமுகவை சேர்ந்தது. எனவே அதே உத்வேகத்துடன் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள். ஒன்றரை ஆண்டுகால திமுக ஆட்சியில் பெரிய அளவில் சர்ச்சைகள் எழவில்லை எனக் கூறப்படுகிறது.
அந்த இரண்டு சிக்கல்அவ்வப்போது எழுந்து வரும் விமர்சனங்களை மறுப்பதற்கில்லை. ஆனால் கிட்டதட்ட ஆளுக்கட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக அதிமுக கருதுகிறது. இந்த விஷயத்தையும் இடைத்தேர்தலில் பரிசோதித்து பார்த்து விடலாம். இவ்வாறு அரசியல் கணக்குகளை போட்டு வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு முக்கியமான இரண்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.
பொதுக்குழு வழக்குஒன்று அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு. இதில் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இரட்டை இலை யாருக்கு என தேர்தல் ஆணையத்தின் முன்பிருக்கும் சிக்கல். பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவரில் யாராவது ஒருவருக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
இரட்டை இலை சின்னம்அப்படி நடந்தால் வெற்றி கிடைத்தவர் பக்கம் இரட்டை இலை சென்றுவிடும். ஒருவேளை சின்னம் கிடைக்கவில்லை தனி சின்னத்தில் நின்று களம் காணவும் தயாராக இருப்பதாக எடப்பாடி தரப்பு கூறி வருகிறது. இவ்வாறு வெற்றி பெற்று விட்டால் யாருடைய துணையும் இன்றி அதிமுக தனித்து வெற்றி பெற்றுவிட்டது என்ற பெயர் கிடைக்கும்.
கூட்டணி கணக்குகுறிப்பாக பாஜக மீது ஏறி சவாரி செய்கிறோம் என்ற இமேஜ் உடையும் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் சின்னம் கிடைக்காமல் பெரும் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அது கடும் பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே கடந்த தேர்தலை போல கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விடலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம்.
பாஜக திட்டம்இதற்கிடையில் பாஜக வேறொரு கணக்கை போடத் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 4ஆக இருக்கிறது. இதை 5ஆக உயர்த்தும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை அதிமுக உடன்படவில்லை எனில் தனித்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து வருகிறதாம்.