புதுடில்லி, ஒடிசாவில் ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் சி.பி.ஐ., நடத்திய சோதனையில், 17 கிலோ தங்கம், 1.57 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டன.
ஒடிசாவைச் சேர்ந்த பிரமோத் குமார் ஜனா, ரயில்வேயில் முதன்மை தலைமை வணிக மேலாளராக பணி புரிந்து, கடந்த டிசம்பரில் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், பிரமோத் குமார் வீட்டில் சோதனை நடத்தினர்.
இதில், 17 கிலோ தங்கம், 1.5 கோடி ரூபாய் கைப்பற்றினர்.
இதோடு, வங்கி, போஸ்ட் ஆபீஸ்களில் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான டெபாசிட்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பிரமோத் குமார் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வித வருமானமும் இல்லாத இவரது மனைவி, மகள்களும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்கின்றனர்.
எனவே இவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement