புதுடில்லி, கேரளாவில் வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக, ௧௮ கடற்படை வீரர்கள் மற்றும் போலீசார் உட்பட ௩௧ பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது.
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, படிவம் ௧௬ல் சேர்க்கப்படாத பல்வேறு விலக்குகளை பொய்யாகக் கோரி, மொத்தம் ௫௧ பேர், 68 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். இவர்கள் மீது, கேரள வருமான வரித் துறை தலைமை கமிஷனர் சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.
இதன்படி, ௧௮ கடற்படை வீரர்கள், போலீசார், இரண்டு தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள், ஐ.டி., நிறுவனத்தினர் மற்றும் காப்பீடு நிறுவனத்தினர் என மொத்தம் ௫௧ பேர் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
இதில், 20 பேர் தாங்கள் தவறுதலாக வருமான வரியை திரும்பப் பெற்றதாகக் கூறி, ௨௪.௬௨ லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தினர். ஆனால், மீதமுள்ள ௩௧ பேர், மொத்தம் ௪௪.௦௭ லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்தவில்லை என சி.பி.ஐ., குற்றம்சாட்டி, இவர்கள் மீது வழக்கு பதிந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement