Viral Video: தேவையா இது… செல்ஃபியால் வந்த சிக்கல்! வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் செல்ஃபி எடுப்பதற்காக ஏறிய நபர், அது புறப்படுவதற்கு முன்பாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார்.  என்ன செய்வது என தவித்த அந்த நபர்  வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது, மேலும் டிக்கெட் பரிசோதகர் (டிசி) வருவதற்கு முன்பு அவர் கதவைத் திறக்க முயற்சிப்பதை காணலாம். வந்தே பாரத் ரயிலில் கதவுகள் கணினி மூலம் பூட்டப்படுவதால், திறக்க வாய்ப்பில்லை என டிக்கெட் பரிசோதகர்  கூறுகிறார்.

“கதவு பூட்டிக் கொண்ட பின், அதைத் திறக்க முடியாது… அது ஆட்டோமேடிக்காக இயங்குகிறது. ரயிலுக்குள் படம் எடுக்க யாராவது நுழைவார்களா? உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?” எனஎரிச்சலடைந்த TC பதிலளிப்பதைக் கேட்கலாம். அந்த நபர் பிரச்சனையில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, ​​அவர் அச்சத்துடன் இருப்பதை வீடியோ காட்டுகிறது.

அந்த நபர் டிக்கெட் பரிசோதகரிடம் ஒரு தீர்வைக் வழங்குமாறு கேட்கிறார். இதற்கு, டிசியும் இன்னொருவரும் விஜயவாடாவில் தான் இறங்க முடியும் என்று அவரிடம் சொன்னார்கள். விஜயவாடா – ராஜமுந்திரியில் இருந்து 160 கிமீ தொலைவில் – அடுத்த நிறுத்தம் தெரிவிக்கும்போது TC மற்றும் இரண்டாவது அதிகாரி லேசான சிரிப்பலைக் காணலாம்.

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

வீடியோ டாக்டர் கிரண் குமார் கர்லாபு என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்டது நிலையில் 5,45,000 பார்வைகளைத் தாண்டியுள்ளது. “தெலுங்கு நபர் ராஜமுந்திரியில் வந்தே பாரத் ரயிலில் படம் எடுப்பதற்காக ஏறினார், ரயில் நகரத் தொடங்கியவுடன் தானியங்கி அமைப்பு கதவுகளை பூட்டியது. வழியை விரும்பி, ‘இப்போது அடுத்தது விஜயவாடா தான்’ என்று டிக்கெட் பரிசோதகார் கூறுகிறார்,” என்று பயனர் பதிவிட்டார்.

இந்தியாவின் எட்டாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 15) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது தெலுங்கானாவின் செகந்திராபாத் மற்றும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்திற்கும் இடையிலான ரயில் சேவையாகும், மேலும் இரு பகுதிகளுக்கு இடையேயான 700 கிமீ தூரம் தொலைவை கடப்பதற்கான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8.5 மணி நேரமாகக் குறைக்கிறது. இந்த ரயிலில் 1,128 பயணிகள் பயணம் செய்ய முடியும் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அமரும் வசதி மட்டுமே உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.