அமெரிக்க மாகாண கவர்னரான முதல் இந்திய பெண்| Hyderabad-born Aruna Miller Sworn-in as Maryland’s First Indian American Lieutenant Governor

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாண துணைநிலை கவர்னராக இந்தியாவில் பிறந்த அருணா மில்லர் என்பவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பொறுப்பேற்று கொண்டார். இந்த மாகாணத்தின் கவர்னராக பதவியேற்று கொண்ட முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் பிறந்தவர் அருணா மில்லர். பொறியாளரான இவரது தந்தை ஐபிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக தெரிகிறது. அருணா 7 வயதாக இருக்கும் போது, தந்தையின் பணிநிமித்தம் காரணமாக பெற்றோருடன் சென்று அமெரிக்காவில் குடியேறினார்.

latest tamil news

கடந்த நவம்பர் மாதம் மேரிலாண்ட் மாகாண துணை நிலை கவர்னருக்கு பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து நேற்று( ஜன.,18) அருணா மில்லர், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்று கொண்டார்.

latest tamil news

மேரிலாண்ட் மாகாணத்தின் துணை நிலை கவர்னரான முதல் இந்தியர், முதல் பெண், முதல் கறுப்பினத்தவர் ஆகிய பெருமையும் அருணாவுக்கு கிடைத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.