சென்னை கொத்தவால்சாவடியில் முதியவரை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் 106ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கொத்தவால்சாவடியில் அதிமுகவினர் சார்பில் பிரியாணி வழங்கப்பட்டது. சுமார் 2000 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்ட நிலையில் அளவுக்கு அதிகமான மக்கள் கூடினர்.
அப்போது பணியில் இருந்த கொத்தவால்சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், கூட்டத்தைக் கட்டுப்படுத்த வரிசையை சரி செய்தார்.
அப்போது முதியவர் ஒருவரை கீழே இழுத்து தள்ளிய அவர் காலால் எட்டி உதைத்தார். காவல் உதவி ஆய்வாளரின் சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் தொடர்பான வீடியோ வெளியானது.
இதையடுத்து, தாக்குதல் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதியவரை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
newstm.in