எடப்பாடி சாய்ஸ் இவர் தானாம்… ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்!

அதிமுக கடந்த 7 மாதங்களாக உட்கட்சி பூசலில் தவித்து கொண்டிருக்கிறது. ஒற்றை தலைமைக்கான போட்டியில் அதிகாரமிக்க நாற்காலியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பலமாக மோதி வருகின்றனர். இந்த மோதலை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்இதுதொடர்பாக இரு தரப்பும் தீவிரமாக ஆலோசித்து வரும் நிலையில் கூட்டணி கட்சிக்கு சீட் ஒதுக்கப்படுமா? இல்லை அதிமுகவே நேரடியாக போட்டியிடுமா? எடப்பாடி தரப்பு வேட்பாளர் யார்? அவருக்கு போட்டியாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் யார்? எனக் கேள்விகள் நீள்கின்றன. ஒருவேளை இருதரப்பும் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தால் இரட்டை இலை சின்னம் தொடர்பான சிக்கல் எழும்.
இரட்டை இலை சின்னம்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இருவருமே சின்னத்தை சொந்தம் கொண்டாடுவர். ஆனால் பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை. வரும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

முந்திக் கொண்ட ஓபிஎஸ்இதையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள் இடைத்தேர்தலில் நெருக்கடி வந்துவிடுகிறது. இதனால் அதிமுகவின் இருதரப்பும் என்ன செய்யப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது. வரும் 23ஆம் தேதி மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடனான கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.

எடப்பாடி சாய்ஸ்எடப்பாடி தரப்பு இன்னும் சைலண்ட் மோடில் தான் உள்ளது. ஆனால் தனது தரப்பில் வேட்பாளரை தற்போதே தயார் செய்து வைத்துவிட்டதாக தெரிகிறது. அதாவது எடப்பாடியை பொறுத்தவரை ரெண்டே சாய்ஸ் தானாம். ஒன்று மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம். இரண்டாவது முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ்.தென்னரசு.

எம்.ஜி.ஆரின் முதல் வெற்றிஇது உண்மையெனில் ”எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஸ்டைலில் எடப்பாடியார்” என ரத்தத்தின் ரத்தங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடும். ஏனெனில் அவர்கள் சிறிய வரலாற்றை நினைவுபடுத்துகின்றனர். எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார்.

இடைத்தேர்தல் வியூகம்அவரது வழியில் 1989ஆம் ஆண்டு 27 இடங்களில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு துணிச்சலான முடிவு தான் காரணமாம். இதேபாணியில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமியும் அதிரடியாக நடந்து கொண்டார் என்ற பெயர் வரக்கூடும். ஆனால் வெற்றி என்பது தான் அடுத்தகட்ட அரசியல் நகர்வை தீர்மானிக்கிறது. எடப்பாடிக்கு மட்டும் அப்படி நடந்து விட்டால் அதிமுக அவருக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

சீட் கேட்கும் தமாகாஆனால் அந்த வெற்றி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்கின்றனர் ஆளுங்கட்சி தரப்பினர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட தமிழ் மாநில காங்கிரஸ் விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் அதிமுகவினர் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். எனவே எடப்பாடி தரப்பின் அடுத்தகட்ட முடிவு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.