வாஷிங்டன்,
உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒரு நாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தநிலையில், சிஇஓ உடன் ஆலோசனை கூட்டம் எனக்கூறி காலை 7.30 மணிக்கு அலுவலகத்தின் கான்பரன்ஸ் அறைக்கு வரவழைத்து, 3000 ஊழியர்களை அமெரிக்க நிறுவனம் ஒன்று பணி நீக்கம் செய்துள்ளது.
எங்களை மன்னித்துவிடுங்கள், வேறு வழியில்லை, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் எனக்கூறி மேலாளர்கள் வருத்தத்துடன் ஊழியர்களை வலுக்கட்டாயமாக பணிநீக்கம் செய்துள்ளது பணிபுரிந்து ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிக வட்டி விகிதங்கள், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டங்கள், ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக உலகளாவிய சில தனியார் வங்கிகள் சமீபத்திய மாதங்களில் தங்கள் பணியாளர்களைக் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.