அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பிளான்டர்ஸ்வில்லி உள்ள வனப்பகுதியில் இருந்து 4 நாட்களுக்கு பிறகு 3 வயது சிறுவன் கிறிஸ்டோபர் ராமிரெஸ் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவன்
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள பிளான்டர்ஸ்வில்லி என்ற வனப்பகுதியில் நான்கு நாட்கள் வரை தனியாக உயிர் பிழைத்த சிறுவன் “ஒற்றை அதிசயம்” என்று அப்பகுதி மக்கள் புகழ்ந்து வருகின்றனர்.
கடந்த 2021 அக்டோபரில் பக்கத்து வீட்டு நாயைப் பின் தொடர்ந்து காணாமல் போன 3 வயது சிறுவன், நான்கு நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டான்.
KHOU 11
முதலில் சிறுவன் கடத்தப்பட்டதாக அவரது தாயார் அராசெலி நுனேஸ் அஞ்சினார், இதையடுத்து பிளான்டர்ஸ்வில்லியில் (Plantersville) ஒரு பெரிய தேடுதல் குழு நிறுத்தப்பட்டது. ஆனால் டிம் என்ற நபர் சிறுவனை அவரது வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள காடுகளில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார்.
இன்சைட் எடிஷனிடம் இது தொடர்பாக டிம் தெரிவித்த தகவலில், நான் பைபிள் படிப்பு வகுப்பில் தேடுதலை பற்றி கேள்விப்பட்டதும், சிறுவனை தேடி காட்டுக்குள் சென்றேன், இறுதியாக கிறிஸ்டோபர் ராமிரெஸை அவரது வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள வனப்பகுதியில் கண்டுபிடித்தேன்.
Texas EquuSearch
அங்கு அவர் மிகவும் அமைதியாக காணப்பட்டார், சிறு துளி கண்ணீர் கூட சிறுவனிடம் இல்லை, ஆனால் அவர் வழியில் எங்கோ தனது ஆடைகளை இழந்து நிர்வாணமாக காணப்பட்டார், அத்துடன் காலில் செருப்பு இல்லாமலும் காணப்பட்டார். சிறுவனை கண்டுபிடிக்கப்பட்டது ஒரு அதிசயம் என்று தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக பதிவுகள்
அதிர்ச்சியூட்டும் கதையைப் பற்றி வாசகர் ஒருவர் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், “என் கணவர் அவரை ஜங்கிள் புக்கில் இருந்து மோக்லி என்று அழைத்தார். இந்த சிறுவன் எப்படி அந்த நாட்களில் உயிர் பிழைத்தேன் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
Texas EquuSearch
மற்றொருவர், “இந்தச் சிறுவன் பாதுகாப்பாக இருப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீண்ட பகல் மற்றும் இருண்ட இரவுகளில் இந்தச் சிறுவன் காடுகளில் இழந்த மனவேதனையை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அந்த பயங்கரத்தை அவன் உணர்ந்திருக்க வேண்டும். என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.”