புதுடெல்லி: ஸ்வாதி மாலிவால் டெல்லியின் பெண்கள் பாதுகாப்பு பற்றி நேற்று அதிகாலை 3 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் காரை ஓட்டி வந்த நபர் ஒருவர் தனது காரில் ஏறும்படி மாலிவாலிடம் கூறியுள்ளார். மாலிவால் ஏற மறுக்கவே காரை சிறிது தூரம் ஓட்டி சென்று விட்டு திரும்பிய அந்த நபர் மீண்டும் வற்புறுத்தவே, அந்த நபரை பிடிக்க கார் கண்ணாடி வழியாக ஸ்வாதி மாலிவால் கையை உள்ளே நுழைத்துள்ளார். அப்போது கார் கண்ணாடியை மூடிய அந்த நபர் 15 மீட்டர் தூரத்துக்கு மாலிவாலை காரில் இழுத்து சென்றுள்ளார். இது குறித்து ஸ்வாதி மாலிவால் அளித்த புகாரின் பேரில், ஹரிஷ் சந்திரா(47) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஸ்வாதி மாலிவால், ”குடிபோதைாயில் கார் டிரைவர் ஒருவர் என்னை காரில் இழுத்து சென்றார். நல்லவேளையாக நான் உயிர் தப்பினேன். எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், பிற பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு தினத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரு பெண் மீது கார் மோதி 12 கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் நடந்தது. இந்த நிலையில் மகளிர் ஆணைய தலைவிக்கு நடந்துள்ள இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.