திருப்பத்தூர் அருகே மாடு விடும் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு கிராமமே கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 180 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்த மாடு விடும் போட்டிக்கு போலீசார் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர். ஆனால் மதியம் 2:30 மணிக்கு மேலும் விழா நடைபெற்றதால், போலீசார் விழாவை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போட்டி நிறுத்தப்பட்டது.
அப்போது போட்டியில் கலந்து கொண்ட காளையின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் விழா கமிட்டி இடம் காளை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கூட்டம் அதிகமானதால் போலீசார் லேசான தடியடை நடத்தினர்.
இதற்கிடையே கூட்டத்தில் புகுந்த ஒரு காளை முட்டியதில், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த முஷாரப் என்ற இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரின் ஒரு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களிடம் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டபோது,
போராட்டக்காரர்களுக்கும், போலீசர்க்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, போராட்டக்காரர்கள் சிலர் கல்விச்ச சம்பவத்தை அரங்கேற்றனர்.
இதில் போலீசார் ஒருவரின் மண்டை உடைந்ததுடன், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொது சொத்துகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 36 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.