ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூன்று மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியானது. திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானது.
இதனையடுத்து தற்போது அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் தெரிவித்தார்.
இந்நிலையில், இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேதானந்தம், சரஸ்வதி, என்.பி.பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் அடங்கிய குழுவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமித்துள்ளார்.
இத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தலைவர்களின் படம் மற்றும் பெயர்கள் மறைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
newstm.in