வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வெல்லிங்டன்: நியூசிலாந்து பிரதமராக ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த ஜசிந்தா ஆர்டர்ன் வரும் பிப்ரவரி 7ம் தேதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன் எனக் கூறியுள்ளார்.
நியூசிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜசிந்தா ஆர்டர்ன். கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். நியூசிலாந்தின் பொதுத்தேர்தல் வரும் அக்.,14ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜசிந்தா ஆர்டர்ன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முழுமையான ஆற்றல் இருந்தால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும், 6 ஆண்டுகள் பொறுப்பு வகித்துள்ள நிலையில் இனிமேல் முழு ஆற்றலுடன் செயலாற்றுவேன் என்று தோன்றவில்லை. எனவே பதவி விலகுகிறேன்.
இது கடினமான பணி என்பதால் நான் விலகி செல்லவில்லை. அப்படி இருந்து இருந்தால் வெறும் இரண்டே மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகி சென்று இருப்பேன். நாட்டை வழிநடத்துவதற்கு சிறந்த நபர் இருப்பதை அறிந்ததால் நான் இந்த பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இனியும் பதவியை தொடர விரும்பவில்லை என்பதை உணர்ந்து முடிவு எடுத்தேன். அக்டோபரில் நடைபெறும் தேர்தலில் தாம் போட்டியிட போவதில்லை. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement