சண்டிகர், பஞ்சாப் எல்லை அருகே, பாகிஸ்தானிலிருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக கடத்தி வரப்பட்ட சீன ஆயுதங்களை, நம் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில், இந்திய – பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள உன்ச்சா தகலா என்ற கிராமப் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து, ட்ரோன் பறந்து வரும் ஒலி கேட்டது. ஆனால், கடும் பனிமூட்டம் காரணமாக அதை காண முடியவில்லை.
உடனே உஷாரான பாதுகாப்புப் படையினர், ஒலி வந்த திசை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து, ட்ரோன் நொறுங்கி விழுந்த சத்தம் கேட்டுள்ளது. பின், வீரர்கள் தீவிரமாக தேடி, இந்திய பகுதியில் விழுந்து கிடந்த ட்ரோனை கைப்பற்றினர்.
இதில், நான்கு சீன தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. பயங்கரவாதிகளின் சதிச் செயலை முறியடித்த பாதுகாப்புப் படையினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement