பா.ஜ., எம்.பி. விமானத்தில் அவசர வழிக்கதவை திறக்கவில்லை: அண்ணாமலை| BJP, MP Emergency door not opened on plane: Annamalai

பெங்களூரு: விமானத்தில் அவசர வழிக் கதவை பா.ஜ., எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு தெற்குத் தொகுதி எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையுடன், டிச., 10ல் ‘இண்டிகோ’ விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றார். விமானம் புறப்படவிருந்த நிலையில், தேஜஸ்வி சூர்யா அவசரக் கதவை தவறுதலாக திறந்தார்.

இதையடுத்து, அந்த விமானத்தில் கடும் சோதனை செய்யப்பட்டு, இரண்டு மணி நேர தாமதமாக புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்திற்கு, தேஜஸ்வி சூர்யா மன்னிப்பு கேட்டதாக, மத்திய விமானத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று(ஜன.,18) தெரிவித்தார்.

இந்நிலையில் கர்நாடகாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: விமானத்தில் அவசர வழிக் கதவை பா.ஜ., எம்.பி. தேஜஸ்வி திறக்கவில்லை. திறந்திருந்ததை விமான பணிப்பெண்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார் தேஜஸ்வி. இவர் தனது விளக்கத்தை விமான நிறுவனத்திற்கு அளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.