வைர வியாபாரியின் 9 வயது மகள் துறவறம் | Dhuruvaram, the 9-year-old daughter of a diamond merchant

சூரத், ஜன குஜராத்தில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியின், ௯ வயது மகள் நேற்று துறவறம் பூண்டார்.

குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சூரத் நகரைச் சேர்ந்த தனேஷ் வைர வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி சங்கவி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகள் தேவன்ஷி, ௯, குழந்தை பருவத்தில் இருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டிருந்தார்.

இந்நிலையில், தேவன்ஷி நேற்று ஜைன மத துறவியிடம் தீட்சை பெற்று துறவறம் பூண்டார்.

இதற்கான சடங்குகள் ஜன., ௧௪ முதல் நடைபெற்று வந்தன. இந்த நிகழ்ச்சியையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில், நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.